முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய போதனைகள்! (The beautiful teachings of Prophet Muhammad! (PBUH)
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய போதனைகள்!
The beautiful teachings of Prophet Muhammad (PBUH)! Tamil
* பஜர் [அதிகாலை வேளை), அஸர் [மாலை], மரிப் (சூரியன் மறைந்ததும் ] மற்றும் இஷா இடையே துாங்காதீர்கள்.
* நாற்றமுடையவர்களோடு அமர வேண்டாம். துாங்கும்முன் மோசமான பேச்சு பேசக்கூடிய மக்களிடையே துாங்க வேண்டாம்.
*உங்கள் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம்.
* உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
* உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
* காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
*தொழுகையின் போது வானத்தை பார்க்கக் கூடாது.
* கழிவறை உள்ளே எச்சில் துப்பக்கூடாது.
* கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
* உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
* கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
* சூடான உணவை ஊதி சாப்பிடக்கூடாது.
* உட்கார்ந்த நிலையில் தண்ணீர் அருந்துங்கள்.
* வயிறு புடைக்க உணவு உண்ணாதீர்கள்.
* தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல், வாய் வைத்து நன்கு புசித்து குடியுங்கள்.
மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
* பாங்கு மற்றும் இகாமத் இடையே பேச வேண்டாம்.
* கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.
* உங்கள் நண்பர்களைப் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
* உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
* நடந்து செல்லும்போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்.
* நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.
* உங்கள் நண்பர்களை பற்றி சந்தேகம் வேண்டாம்.
* எந்த நேரத்திலும் பொய் பேசக்கூடாது.
* சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
* மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
* தனியாக பயணம் செய்ய வேண்டாம்.
* உங்கள் சொந்த முடிவாக இருந்தாலும் மற்றவர்களிடம்
ஆலோசனை கேளுங்கள்.
* உங்களை பற்றி பெருமை கொள்ளக்கூடாது.
* உணவை குறை கூற வேண்டாம்.
* பெருமை வேண்டாம்.
* பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காதீர்கள்.
* விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.
* வறுமையின் போது பொறுமை காக்கவும்.
*நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
* செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
* உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
* இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
* அதிகம் துாங்கக்கூடாது. அது மறதியை ஏற்படுத்தும்.
* ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு
தேடுங்கள்.
* இருட்டில் சாப்பிடக்கூடாது.
* வாய் முழுக்க சாப்பிட வேண்டாம்.
What are the basic teachings of Muhammad?
What was the teaching of the Holy Prophet Muhammad?
What are the teaching methods of the Prophet Muhammad?
Tag: #Al-Quran #Islam #Ramadan #Allah #Quran #Arabic #Muhammad #ProphetMuhammad #TamilQuran #AnvarAxn #Tamil
Link : https://anvaraxn.blogspot.com/
%20%20AnvarAxn.png)
Comments
Post a Comment